மன்னார்குடி, ஆக.26- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறிதல் தேர்விற்கு பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30. இந்த தேர்வு 6, 7,8-ம் வகுப்புகளை உள்ளடக்கிய இளநிலை 9, 10 வகுப்புக்களை உள்ளடக்கிய உயர்நிலை, 11, 12 வகுப்புக்களை உள்ளடக்கிய மேல்நிலை என மூன்று நிலைகளில் தமிழ்நாடு முழுவதும் 02-11-2019-ல் நடைபெறும். தேர்வில் பங்கேற்கும் அனைவரும் பதிவுக் கட்டணமாக ரூ125 செலுத்த வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஒரு ஆண்டிற்கான துளிர் அறிவியல் மாத இதழ் அல்லது ஜந்தர் மந்தர் ஆங்கில அறிவியல் இதழ் பள்ளி முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மாநில அளவில் முதல் 10 இடங்களை பெறும் மாணவர்களுக்கும், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கும் அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானிகள் சந்திப்பு மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கப்படும். 50 பதிவுகளுக்கு மேல் செய்யும் பள்ளிகள் தேர்வு மையமாக செயல்படும். பள்ளிகள் பதிவுக் கட்டணத்தை வங்கிகளின் வரைவோலையாகவோ(அ) பண பரிமாற்றம் மூலமாகவோ செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு மாநில மைய தொலைபேசி-044-28113630, 99943-68501 என்ற எண்ணிலும், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் 94867-66565, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யு.எஸ்.பொன்முடி 94431-14459 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. , ஆக.26- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறிதல் தேர்விற்கு பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30. இந்த தேர்வு 6, 7,8-ம் வகுப்புகளை உள்ளடக்கிய இளநிலை 9, 10 வகுப்புக்களை உள்ளடக்கிய உயர்நிலை, 11, 12 வகுப்புக்களை உள்ளடக்கிய மேல்நிலை என மூன்று நிலைகளில் தமிழ்நாடு முழுவதும் 02-11-2019-ல் நடைபெறும். தேர்வில் பங்கேற்கும் அனைவரும் பதிவுக் கட்டணமாக ரூ125 செலுத்த வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஒரு ஆண்டிற்கான துளிர் அறிவியல் மாத இதழ் அல்லது ஜந்தர் மந்தர் ஆங்கில அறிவியல் இதழ் பள்ளி முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மாநில அளவில் முதல் 10 இடங்களை பெறும் மாணவர்களுக்கும், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கும் அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானிகள் சந்திப்பு மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கப்படும். 50 பதிவுகளுக்கு மேல் செய்யும் பள்ளிகள் தேர்வு மையமாக செயல்படும். பள்ளிகள் பதிவுக் கட்டணத்தை வங்கிகளின் வரைவோலையாகவோ(அ) பண பரிமாற்றம் மூலமாகவோ செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு மாநில மைய தொலைபேசி-044-28113630, 99943-68501 என்ற எண்ணிலும், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் 94867-66565, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யு.எஸ்.பொன்முடி 94431-14459 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.