tamilnadu

திண்டுக்கல் மற்றும் பேராவூரணி முக்கிய செய்திகள்

பகுத்தறிவுக்கெதிராக  புரளி கிளப்பும்  மூட நம்பிக்கை தர்ப்பை புற்கள்

திண்டுக்கல், டிச.26- சூரிய கிரகணத்தையொட்டி வியாழனன்று தமிழகத்தில் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக இந்துத்துவா சக்திகள் பல்வேறு புரளிகளை கிளப்பிவிட்டன. சின்ன சின்ன கோவில்களில் கூட சாமி சிலைகளை மூக்காடிட்டு மறைத்த னர். கிரகணத்தைப் பார்க்கக்கூடாது. கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என அறிவுரைகளை அள்ளிவீசின. உச்ச பட்சமாக மார்கழி மாத காலைப் பொழுதில் விளக்கு பூஜைக்கு சென்ற பெண்களிடம் தர்ப்பை புல்லின் ஒரு சிறு துண்டைக் கொடுத்து அதை உங்கள் வீடுகளில் உள்ள பாத்திரங்களில் போட்டு வையுங்கள். அப்போது தான் கிரகணத்தின் பாதிப்பு இருக்காது என்று புரளியை கிளப்பி விட்டுள்ளனர்.  அந்த பெண்களிடம் இதே கிரகணத்தால் பீடிக்கப்பட்ட அணைக்கட்டு தண்ணீரில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட நீர் நிலைகளில் யார் இந்தப் புல்லைக் கொண்டு போடு வார்கள். அந்தத் தண்ணீர் குழாயில் வரும் போது அதைக் குடித்தால் பாதிப்பு ஏற்படாதா? கிரகணத்திற்கு முன்பாக சமைத்த உணவகங்களிலோ , டீ கடைகளிலோ, கிரகண  நேரத்தில் உணவைப் சாப்பிடுபவர்களுக்கோ, டீ குடிப்ப வர்களுக்கோ பாதிப்பு வராதா என்று கேட்டதற்கு பெண்களி டம் பதில் இல்லை. தர்பைப் புல்லைக் காட்டி மக்களையும், நாளைய குழந்தைகளையும் மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வைத்திருப்பதற்கு எதிராக நாம் தொடர்ந்து அறிவியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சூரியனுக்கு ஏற்பட்ட கிரகணம் போல பல மாநிலங்களில் பாஜகவிற்கும் கிரகணம் பீடித்துள்ளது. மோடிக்கும். அமித்ஷாக்களுக்கும் என்றைக்கு கிரகணம் பிடிக்குமோ அன்றைக்கு தான் இந்தியாவுக்கு விமோசனம்.  இலமு, திண்டுக்கல்

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

 தஞ்சாவூர், டிச.25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒருங்கிணைந்த வேளாண்மை துறை அலுவலகத்தில், தேசிய விவ சாய தினத்தை முன்னிட்டு பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி மாண வர்கள் சார்பாக விவசாயி களை அழைத்து மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் எஸ்.மாலதி தலைமை வகித்தார். இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி பூமிநாதன் மரக் கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வேளாண் அலுவலர் ராணி மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.