tamilnadu

img

பட்டா வழங்கக் கோரி சிபிஎம் தலைமையில் மக்கள் போராட்டம்

ஸ்ரீரங்கம், செப்.30- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எட மலைப் பட்டிபுதூர், பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், பிராட்டியூர், செட்டியப்பட்டி, சொக்க லிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடிமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு எடமலைப்பட்டிபுதூர் கடைவீதியில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் நடை பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கணக்கெடுப்பு செய்து ஆட்சியருக்கு பரிந்துரை செய்து பட்டா வழங்கப்படும் என  ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஒப் பந்தத்தை இது நாள் வரை அமல்படுத்த வில்லை. எனவே இந்த ஒப்பந்தத்தை உடனடி யாக அமல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் திங்களன்று ஆலம்பட்டி புதூர் விஏஓ அலு வலகத்தில் மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு அபிஷேகபுரம் பகுதிச் செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சேகர், லெனின் ஆகியோர் பேசினர். தகவல் அறிந்து வந்த எடமலைப் பட்டிபுதூர் காவலர்கள் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 3 ஆம் தேதி அனைத்து துறை அதிகாரி களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்ச னைக்கு சுமூக தீர்வு காணப்படும் எனத் தெரி வித்தனர். இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.