கொரோனா வைரஸ் எதிரொலி
கோவை, மார்ச் 20- கொரோனா வைரஸ் தடுப்பு நடவ டிக்கை காரணமாக தமிழக - கேரளா மாநில எல்லையோரத்திலுள்ள கோவை மாவட்டத் தின் அனைத்து சோதனை சாவடிகளும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) மாலை முதல் மூடப்படுகிறதென மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி தெரிவித்துள்ளதாவது, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்ப டுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் தீவிரமான முறையில் மேற் கொள்ளப்பட்டு, அதற்கான விழிப்புணர் வும் பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தப் பட்டு வருகிறது. அதனடிப்படையில், கோவை அருகாமையில் உள்ள மாநிலமான கேரளாவிலிருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப் பதற்கு ஆம்னி பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகள், அரசு பேருந்துகள்,கார், சரக்கு வாகனங்கள் ஆகியவைகளை முழுமையாக கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத் தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது மேற்கொண்ட நடவடிக்கை யாக தமிழக - கேரள மாநிலத்தின் எல்லை யோரத்திலுள்ள கோவை மாவட்ட சோத னைச் சாவடிகளான வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பக வுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன் பது சோதனை சாவடிகளும் வெள்ளிக்கி ழமை (மார்ச் 20) மாலை முதல் மூடப்படுகி றது. மேலும், கோவை மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கும், கேரள மாநிலத்திலி ருந்து கோவை மாவட்டத்திற்கும் வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப் படுகிறது. இப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதென மாவட்ட ஆட் சியர் தெரிவித்துள்ளார்.