திருச்சிராப்பள்ளி, அக்.15- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிக்குழு சார்பில் திங்களன்று தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு கட்சியின் மலைக்கோட்டை பகுதி செய லாளர் இளையராஜா தலைமை வகித்தார். பிரச்சாரத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கராஜன், ஜெயபால் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். அபிஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் எடமலைப்பட்டிபுதூர் கடைவீதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு அபிஷேக புரம் இடைக்கமிட்டி செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். பிரச்சாரத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். பொன்மலை பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்தி கேயன் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை விளக்கி ஜெயராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத், மோகன். காமாட்சி, சிபிஐ செல்வகுமார், துரைராஜ் ஆகியோர் பேசினர். துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். சிபிஐ ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பேசினர். லால்குடியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன், சிபிஐ தாலுகா செயலாளர் சுப்பிரமணி, நகர செயலாளர் அகஸ்டின் ஆகியோர் பேசினர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் ஒன்றியம் சார்பில் நாகத்தி, அம்மன்பேட்டை, மாத்தூர், நெடார், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. சிபிஎம் தஞ்சை ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, சிபிஐ ஒன்றியச் செயலாளர் டி.கணேசன், ஜி.கிருஷ்ணன், ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்ட னர். தஞ்சாவூர் மாநகரக் குழு சார்பில் சிவகங்கை பூங்கா, மருத்து வக் கல்லூரி, ஆர்.ஆர்.நகர், அண்ணாநகர், தொல்காப்பியர் சதுக்கம் ஆகிய இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். மாநகரச் செயலாளர் என்.குருசாமி, சிபிஐ மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணி யன், மாநகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கிளை செயலாளர் எஸ்.மணி தலைமை ஏற்றார். பிரச்சாரத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், குடந்தை நகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர். தஞ்சை மாவட்டம், திருப்பானந்தாள், பந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. பிரச்சார பயணத்திற்கு சிபிஎம் திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாமிக்கண்ணு, சிபிஐ ஒன்றியச் செயலா ளர் குமரப்பா சிபிஐ(எல்எம்) ஒன்றிய செயலாளர் செல்லதுரை ஆகி யோர் தலைமை வகித்தனர். பிரச்சாரத்தை விளக்கி சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பிஎம்.இளங்கோவன், சிபிஐ கல்யாணசுந்தரம், கண்ணகி ஆகி யோர் பேசினர். பாபநாசம் அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், கபிஸ்தலம், ஆகிய பகுதிகளில் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.சேக் அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெய பால், பாபநாசம் ஒன்றிய செயலாளர் பிஎம்.காதர் உசேன், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு சி.குணசேகரன் மற்றும் சிபிஐ ஒன்றிய செயலாளர் செல்லதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூதலூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்துக்கு சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, தெற்கு ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். திருக்காட்டுப் பள்ளி, செங்கிப்பட்டி, கல்லணை உள்ளிட்ட பல்வேறு இடங்களி லும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் கடைவீதியில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் புனிதன், சிபிஐ ஒன்றிய செயலாளர் ஜி.ஆறு முகம் ஆகியோர் தலைமையில் மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம்.இளங்கோவன், சிபிஐ மாவட்ட செயலாளர் உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் அண்ணா சிலை முன்பு சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம், சிபிஐ ஒன்றிய செயலாளர் ராம நாதன் ஆகியோர் தலைமையில் பிரச்சாரம் தொடங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக காந்தி பூங்கா வந்தடைந்தது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் துரைராஜ், எஸ்.மீனா உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். திருவாரூர்
திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனி வேல், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலா மணி ஆகியோர் தலைமையேற்றனர். திருவாரூர் ஒன்றியத்தில் பள்ளிவாரமங்கலம், ஓடாச்சேரி, ஆண்டிபாளையம், தப்பளாம்புலியூர், அலிவலம், வேலங்குடி, கொட்டாரக்குடி, கல்யாணமகாதேவி, வடகரை, மாங்குடி, மாவூர், புலிவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. மன்னார்குடி
மன்னார்குடியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், சிபிஐ நகரச் செயலாளர் வி.கலைச்செல்வன் தலைமை ஏற்றனர். இதில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சந்திரா, சிபிஐ மாவட்ட நிர்வாகி துரை அருள்ராஜன், சிபிஐ நகர துணைத் தலைவர் பார்த்திபன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் சிபிஐ ஒன்றிய செயலாளர் கே.முருகையன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்றனர். எடை யூர், பாண்டி, இடும்பாவனம், தில்லைவிளாகம் தர்கா, முத்துப் பேட்டை பழைய பேருந்து நிலையம், ஆசாத் நகர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தில் சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தெட்சிணாமூர்த்தி, குணசேகரன், மகேந்திரன், குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றி னார்கள். திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் நகரச் செயலாளர் கேஜி.ரகுராமன், சிபிஐ நகர செயலாளர் முருகேசன் தலைமை வகித்த னர். சிபிஎம் சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் டி.சுப்பிரமணி யன், எஸ்.சாமிநாதன், கே.பி ஜோதிபாசு, சிபிஐ சார்பில் மாநில குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.உலக நாதன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி.வி சந்திர ராமன், முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் பாலு தலைமை வகித்தனர். சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி ஜோதிபாசு, எம்.முருகதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.வி சந்திரராமன், ஜவகர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம்
நாகை நகரம், ஒன்றியம், வேதாரணியம் உள்ளிட்ட இடங்களில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. சிபிஎம், சிபிஐ நாகை நகரக்குழு சார்பில் நாகூர் தர்கா, பேருந்து நிலையம், நாகை ஏழைபிள்ளையார் கோயில், புதிய பேருந்து நிலையம், அபிராமி அம்மன் திருவாசல், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களுக்கு சி.பி.எம். நாகை நகரச் செயலாளர் சு.மணி(பொறுப்பு), சி.பி.ஐ. நாகை நகரச் செயலா ளர் என்.கோபிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சு.சிவகுமார், சி.பி.ஐ.சார்பில் பி.குணாநிதி, காதர்அலி, வி.ஜெய பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாகை ஒன்றியத்தில், பொரவச்சேரியில் துவங்கிய பிரச்சார இயக்கத்திற்கு சி.பி.எம். நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு தலைமை வகித்தார். சிக்கல் கடைத்தெருவில் சி.பி.எம். மாநி லக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து சிறப்புரையாற்றி, பிரச்சார இயக்கத்தை முடித்து வைத்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்தி ரன், எம்.சுப்பிரமணியன், சிபிஐ சார்பில் வி.ராமலிங்கம், செல்ல துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறையில் வட்டச் செயலாளர் சி.மேகநாதன் தலை மையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரியப்பன், உள்ளிட்டோர் பிரச்சாரப் பய ணத்தில் பங்கேற்றனர். வேதாரணியம் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி தலைமை வகித்தார். மாவட்டகுழு உறுப்பினர் மா.முத்துராமலிங்கம், ஏ.வெற்றியழகன், கோவை.சுப்பிரமணி யன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரூர்
க.பரமத்தி பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற தெரு முனைக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் நாட்ராயன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்த சாமி, ஒன்றிய செயலாளர் கே.வி.பழனிச்சாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சண்முகம், கந்த சாமி, எம்.எல்.கட்சியின் மாவட்ட நிர்வாகி ராஜன், மாவட்ட செய லாளர் ராமசந்திரன் ஆகியோர் கோரிக்கை விளக்கிப் பேசி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றி யக்குழு சார்பில் தெருமுனைக் கூட்டம் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் கே.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இலக்குவன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனியப்பன், சங்கப்பிள்ளை, பாப்பாத்தி, ரத்தினம், தங்கராசு, முருகேசன், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.