திருவாரூர், ஜூன் 5- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் கே.வரதராசன் படத்திறப்பு நிகழ்ச்சி திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, தோழர் கே.வரதராசன் உருவப்படத்தினை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் நடைபெற்ற மாவட்டக்குழு கூட்டத்திற்கு சி.ஜோதிபாசு தலைமையேற்றார். ஜூன் 9 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இடதுசாரி கட்சிகளின் கூட்டு இயக்கத்தையும், 16 ஆம் தேதி நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டன இயக்கத்தையும் வெற்றிகரமாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.