கரூர், மே 7-கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து குமரேசன்(50) என்பவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குமரன் கவுண்டன்வலசு எனும் இடத்தில் 108 அவசர ஊர்திதிடீரென பழுது ஆகி நின்றது. ஓட்டுநர் வாகனத்திலிருந்து இறங்கி பழுது பார்க்கும் முன்னரே திடீரெனமுன்பகுதியில் தீப்பிடித்துக் கொண்டது. உடனே நோயாளி கீழே இறக்கி விடப்பட்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உதவியாளர், அதில் இருந்த நோயாளி ஆகிய மூவரும் உயிர் தப்பினர். 108 அவசர ஊர்தி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.