tamilnadu

img

‘3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை’

தஞ்சாவூர், ஏப்.3- மாநகராட்சி மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (ஈ.எஸ்.ஐ.) தொகையைப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வாயிலில் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர்(சிஐடியு) செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.தஞ்சாவூர் மாநகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்குழாய் கிணறு மின் மோட்டார் இய ககும் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் 2013-ம் ஆண்டு முதல் பிடித்தம் செய்தவருங்கால வைப்பு நிதி, அரசுத் தொழிலாளர் ஈட்டுறுதி தொகையை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுப் படி உடனே வழங்க வேண்டும். ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் மாத காலத்தில் வழங்காமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 12-ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மார்ச் 28-ம் தேதிக்குள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.ஆனால், இதுவரை இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், மாநகராட்சி அலுவலக வாயிலில் மீண்டும் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் மேற்கு காவல்துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் மில்லர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.