tamilnadu

img

இவரெல்லாம் ஒரு கேப்டனா?

உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை யாரும் எதிர்பாராத வகையில் விண்டீஸ் அணி 7 விக்கெட்வித்தியாசத்தில் புரட்டி எடுத்தது. நடப்பு உலகக்கோப்பை சீசனில் விண்டீஸ் அணியை விட பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்ததாகக் களமிறங்கியது.எப்படியும் இந்த ஆட்டத்தில்பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வியைச் சந்தித் தது.தோல்வியால் விரக்தி அடைந்த பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் கூறிய கருத்தில்,”டாஸ் போடும் சமயத்தில் கூட கேப்டன்சர்பராஸ் அகமதுவின் வயிறு வெளியில் வந்து கிடக்கிறது.அவரது முகமும்உருண்டையாகக் குண்டாக இருக்கிறது. இப்படி ஒரு அன்பிட்டான கேப்டனை இதுவரை நான் பார்த்ததில்லை.கீப்பிங் செய்யும் போது அவரால் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகரமுடியவில்லை.மிகவும் சிரமப்படுகிறார்” என எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுத்து விட்டார்.சொந்த நாட்டு கேப்டனை அந்நாட்டுமுன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும்அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது.