tamilnadu

img

பக்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம்

பக்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தை மெர்சிடிஸ் பெண்ஸ் அணி வீரர் லிவீஸ் ஹாமில்டண் வென்றுள்ளார்.


பார்முலா ஒன் எனப்படும் சர்வதேச கார் பந்தயமான பக்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் மெர்சிடிஸ் பெண்ஸ் அணியின் சார்பில் விளையாடும் உலகின் முன்னணி வீரரான லிவிஸ் ஹாமில்டன் தனது அணியின் சக போட்டியாளர்களான வால்ட்டரி பொடாஸ் மற்றும் பெராரி அணியின் வீரர் சார்லி லெக்லர்க் ஆகியோரை வீழ்த்தி தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.


இத்தொடரை தொடர்ந்து வென்று வந்த பெராரி அணியின் வீரர் சார்லி லெக்லர்க்கின் காரில் ஏற்பட்ட மின்சார கோளாறால் அவர் தொடர்ந்து வேகத்தை அதிகரிக்க முடியாமல் 3வது இடத்தை பிடித்தார். ஹாமில்டன் இரண்டாவது இடத்தை பிடித்த தனது அணியைச் சார்ந்த வீரர் வால்ட்டரி பொடாஸை விட சுமார் 3 நொடிகள் குறைவான நேரத்தில் பந்தய சுற்றுகளை கடந்து வெற்றியை பதிவு செய்தார்.