திருத்துறைப்பூண்டி, ஆக.31- மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக்குழு மற்றும் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு சி.ஜோதிபாசு கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், எம்.பி.கே.பாண்டியன், நகரக்குழு ஆர்.எம்.சுப்பிரமணியன், கே.கோபு, கு.வேதரெத்தினம், எஸ்.தண்டபாணி, எம்.ஜெயபிரகாஷ், ஏ.கே.செல்வம், ஜெ.பாப்பம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.என்.தங்கராசு, டி.எஸ்.மணியன், ஆர்.மதியழகன், வி.ரவி, என்.வீராச்சாமி, எஸ்.பவானி, ஏ.கே.வேலவன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.