tamilnadu

‘மேல்நிலை கல்வியில் பழைய பாடத் திட்டம் தொடரும்’ : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வரவேற்பு

மன்னார்குடி, ஜுலை 9- மேல்நிலை வகுப்புகளில் நான்கு முதன்மை பாடங்களை கொண்ட ஆறு  பாடங்களுடன் கூடிய பழைய பாடத்திட்டமே  தொடரும் என்ற அரசு அறிவிப்பை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வரவேற்றுள்ளது. அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் மற்றும்  மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி ஆகியோர் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெரு ந்தொற்றால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்க ளும் இயல்பு வாழ்க்கையையே இழந்திருக்கி றார்கள். இதற்கிடையில் தமிழக மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில்,  மேல்நிலை (11,12) வகுப்புகளில் பாடத்தி ட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு செய ல்படுத்தப்பட இருந்தது. மேல்நிலை வகுப்பு  மாணவர்கள் மொழிப்பாடம், ஆங்கிலம், நான்கு துறைசார் பாடங்களை உள்ளடக்கிய முதன்மைப் பாடங்கள் (core subjects) என  மொத்தம் ஆறு பாடங்களைப் படித்து வந்த  நிலையில் இனி நான்கு துறைசார் பாடங் களை மூன்றாகக் குறைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைப் பாடங்கள் மாற்றத்துக்கான அர சாணையை, 2019 செப்டம்பர் 18 அன்று வெளி யிட்டது. துறைசார் பாடங்களில் ஒன்றை குறைத்துக் கொள்வதன் மூலம், மாண வர்கள் தங்களது உயர்கல்விக்குப் பயன்பட க்கூடிய பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த  முடியும் என்றும் மேல்நிலைக் கல்வி பயி லும்போதே நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக ளுக்கு தயார்படுத்திக் கொள்ள உதவும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரி வித்திருந்தனர்.  நான்கு துறைசார் பாடங்களுக்கு பதி லாக மூன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது மாண வர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்று கல்வியாளர்கள், உயர்கல்வி ஆலோச கர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தங்க ளின் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.இந்நி லையில் 11,12 ஆம் வகுப்புக்களுக்கு முந்தைய 4 முதன்மைப் பாடங்களைக் கொண்ட 6 பாடங்களுடனான பாடத்திட்டமே தொடரும் என்ற அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்க த்தின் சார்பில் பாராட்டுதல்களை தெரி வித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.