திருவாரூர், ஆக.2- திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வேகமாக பரவி இரண்டாயிரம் பேர் என்ற எண்ணிக்கையை நெருங்கி வரு கிறது. உயிர் பலியும் தொடர்கி றது. மாவட்டத்தில் பரவலாக இந்நிலை தொடர்கிறது. குறிப்பாக குடவாசல் பேரூராட்சி பகுதிகளில் நோய்த்தொ ற்று பரவல் அதிகமானதால் கடந்த 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 30 ஆம் தேதி தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் குடவாசல் பேரூராட்சி பகுதியில் மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவ லர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். ஆயினும் முழு ஊரடங்கு கார ணமாக மக்களின் வருகை குறைவாக இருந்தது. மருத்துவ முகாமை, சுகாதாரப் பணிகள் சம்பந்தப்பட்ட துறைகளே மேற்கொண்டு இருக்க லாம். அமைச்சர் வருகையை தவிர்த்து அரசு துறைகளில் பரபரப்பையும் குறைத்திருக்கலாம். கொரோனா பேரிடர் காலத்தில் அமைச்சரின் பாதுகாப்பற்ற நடவடி க்கைகள் குறித்து தொடந்து விமர்ச னங்கள் எழுந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அன்றும் அமைச்சர் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்பது மக்கள் மத்தியில் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அமைச்சரின் ஆதரவாளர்கள் இந்த பேரிடர் காலத்திலும் தைரியமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று “கெத்து” காட்டி வருவதாக பெரு மைப்பட்டு கொள்கின்றனர்.