குடவாசல் ஆக 3- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள மாத்தூர் ஊராட்சி கிளாக்காடு கிராமத்தில் தெற்கு தெருவில் அமைந்து ள்ள மின்கம்பம் மிக மோச மாக பழுதடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. பழுதடைந்த மின் கம்பத்தை உடனடியாக பெரும் விபத்து நிகழும் முன்பாக அகற்றி புதிய மின் கம்பத்தை அமைக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி கடந்த 2ஆம் தேதி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ்.சாமி நாதன் ஆபத்தான நிலை யில் உள்ள பழைய மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என வலங்கை மான் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு கொடுத்துள்ளார்.