மன்னார்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகரக் குழு அலுவலகத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி கட்சி உறுப்பினர்களின் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. நகரக்குழு செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்கம இந்நிகழ்ச்சியின் துவக்கமாக குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கோலம் கட்சி அலுவலகம் முன்பு வரையப்பட்டது. மக்கள் நல்லிணக்க நாட்டு ஒருமைப்பாட்டின் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நகரச் செயலாளர் அரிகரன், நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகத்திற்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். தமுஎகச மாவட்டத் தலைவர் இரா.தாமோதரன், மூத்த தொழிற்சங்க தலைவர் வீ.கோவிந்தராஜ், நகரக்குழு உறுப்பினர்கள், சிஐடியு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.