tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களின் கடன் நிலுவைத் தொகையை உடனே செலுத்தக் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, மே 30-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி, கூத்தாநல்லூர், மன்னார்குடி நக ராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களின் மாத  சம்பளத்தில் அவர்கள் தாட்கோ மற்றும் கூட்டு றவு கடன் சங்கங்களில் கடன் பெற்றுள்ளனர். அவர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் கடன் தொகையை வசூலித்து வந்தனர். ஆனால் அந்தத் தொகையை 2014-ஆம் ஆண்டில் இருந்து கட்டவில்லை என்பது தெரியவருகிறது. இதனால் கடன் மீதான வட்டி அதிகரித்துள்ளது. இதனை பலமுறை வற் புறுத்தியும் நகராட்சியிடம் கூறியும் அதை செலுத்த முன்வரவில்லை. அதனால் பணியாளர்களுடைய நிலு வைத் தொகையை உடனடியாக வட்டியுடன் கட்ட வேண்டும். இந்த மாதத்தில் இருந்து சம்ப ளத்திலிருந்து கடன் தொகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடைய நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், சி.ஐ.டி.யு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க கிளை தலைவர் பாபு ஆகியோர் நகராட்சி ஆணையரிடம்(பொ) கோரிக்கை மனு அளித்தனர்.