திருத்துறைப்பூண்டி, ஜூன் 28- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய காவலர் ஒருவருக்கும், ஆலிவலம் காவல்நிலையத்தில் ஒருவருக்கும், விக்ரபாண்டியம் காவல்நிலையத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருத்துறைப்பூண்டி காவலர் குடியிருப்பில் ஒரே அறையில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு, சுகாதாரத் துறையினரால் முற்றிலுமாக அடைக்கப்பட்டது. காவலர் குடியிருப்பில் குடியிருப்போருக்கு திருத்துறைப்பூண்டி நகராட்சி மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.