திருவாரூர், ஜூலை 21- திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றாளர்களின் எண்ணி க்கை ஆயிரத்தை நெருங்கிக் கொண்டு இரு க்கிறது. திருவாரூர் நகராட்சி பகுதிகளிலும், ஒன்றிய பகுதிகளில் கிராமங்களிலும் பரவ லாக நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா சிகிச்சை மையங்க ளில் உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுதலாகிவுள்ளது. ஒருவர் உயிரி ழந்துள்ளார். இந்நிலையில் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் தொற்றாளர்களின் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய பொதுமக்கள் பரி சோதனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ள னர். இதனால் அந்தந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் அரசு தங்களுக்கு நோய்த்தொற்று குறித்த பரிசோதனையை விரைந்து செய்ய வேண்டுமென காத்துள்ளனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் நோய் அறிகுறிகள் தெ ரிந்தால் மட்டுமே பரிசோதனை செய்யாலாம் என்று அறிவுறுத்துகின்றார்கள். இது மிகுந்த ஆபத்தை விளை விப்பதுடன் உயிரிழப்புகளுக்கும் இட்டுச்செ ல்லும் என்று பொதுமக்கள் கவலைப்படு கின்றனர். செய்வதறியாது நிலையில் ஓடி யாடி விளையாடக்கூடிய குழந்தைகளை யும் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். குறை ந்தபட்சம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமா வது அனைத்து வீடுகளுக்கும் பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எனவே எச்ச ரிக்கை உணர்வுடன் உடனடியாக கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கைகளை துரிதப்ப டுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கி றார்கள். ஆவன செய்யுமா மாவட்ட நிர்வாகம்…?