நாகப்பட்டினம், மே 31- இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐ டியு) பொன்விழா நிறைவு ஆண்டு தினக் கொடியேற்ற நிகழ்ச்சி நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கக் கட்டடம் முன்பு நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் பி.ஜீவா கொடியேற்றினார். தொடர்ந்து சிறப்புக் கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். நாகை அரசுப் போக்குவரத்து மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துப் பணி மனைகள் முன்பு சங்கக் கொடி ஏற்றப் பட்டது. பி.ஜீவா, எம்.பெரியசாமி, ஆர். சண்முகசுந்தரம், வி.ராமலிங்கம், சு.சிவ குமார், ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிக்கல் நகரில் ஏ.ஜே.ரகு மான் தலைமையில் கொடியேற்றப்பட் டது. கீழ்வேளூரில் நடந்த நிகழ்ச்சிக்கு முருகவேல் தலைமை வகித்தார்.
ஒக்கூ ரில் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் பி.செல்வராஜ் கொடி யேற்றினார். கீழையூர்ப் பகுதியில் சந்தான கிருஷ்ணன் தலைமையில் கொடியேற்றப் பட்டது. பெரியதும்பூரில் கூட்டுறவு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் சு.மணி கொடியேற்றினார். திருமருகல் பகுதியில் பி.லெனின், திருப்புகலூரில் சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி, தலை ஞாயிறில் சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.முனி யாண்டி ஆகியோர் கொடியேற்றினர். கொளப்பாட்டில் உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.தங்க மணி, தரங்கம்பாடியில் என்.இலட்சு மணன், திருக்கடையூரில் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.ரவிச்சந்திரன் ஆகியோர் கொடி யேற்றினர். மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் அமைப்பின் திட்டத் தலை வர் சிவராஜன் தலைமையில் நடைபெற் றது. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டா லின், விவசாய சங்க மாவட்ட செயலா ளர் துரைராஜ், திட்ட செயலாளர் எம். கலைச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர்.