திருவாரூர்: இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) 16வது அகில இந்திய மாநாட்டிற்கான நிதியளிப்பு பேரவை திருவாரூரில் நடைபெற்றது. இப்பேரவை மாவட்ட தலைவர் ஆர்.மாலதி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில செயலாளர் ஆர்.மோகன், மாவட்ட செயலாளர் டி.முருகையன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் எம்.பி.கே.பாண்டியன், செயலாளர் ஜி.பழனிவேல், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கே.என்.அனிபா, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வைத்தியநாதன், மாவட்ட துணைத்தலைவர் வி.சுப்ரமணியன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிஎன்.லெனின், ஜி.ரெகுபதி, ஆர்.சோமசுந்தரம், கே.ரஜேந்திரன், வி.முருகானந்தம், ஏ.கோவிந்தராஜ், ஏ.ஒன்.மணி, எம்.மோகன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டச் சங்கங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஐம்பதா யிரம் ரூபாயினை மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறனிடம் மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.என்.அனிபா வழங்கினார். மாநில செயலாளர் ஆர்.மோகன் அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி பேசினார்.