மன்னார்குடி, பிப்.6- காப்பீட்டுக் கழகத்தை தனியார் மயமாக்குதல், ரயில் வழித்தடங்களை தனி யாருக்கு அளித்தல் போன்ற மக்கள் விரோத கொள்கைகளை அறிவித்த மத்திய பட்ஜெட்டை கண்டி த்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மன்னார்குடி பந்தலடியில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.ரெகுபதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.பழனி வேல் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றி னார். சிஐடியு இணைப்புச் சங்க தலைவர்கள் கே.முனி யாண்டி, ஜி.தாயுமானவன், பொன்.ஆறுமுகம். ஏ.அரிக ரன், ஏ.பி.தனுஷ்கோடி, சிவ சுப்பிரமணியன், விவசாயி கள் சங்க செயலாளர் வி.மாரி முத்து. அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கே.சிவ சுப்பிரமணியன், கே. ஜெய பால், முத்துக்குமார் பேசினர். மாவட்டச் செயலாளர் டி.முரு கையன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து உரை யாற்றினார்.