மன்னார்குடி, ஆக.18- தமிழ்நாடு முழுவதி லும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதலாம் ஆண்டு மாண வர்கள் சேர்க்கைக்காக மாண வர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக கிராமப்பு றங்களில் இருந்து ஏழை -எளிய-நலிந்த குடும்பங்க ளைச் சார்ந்த மாணவிக ள்தான் அதிக அளவில் தங்கள் பெற்றோர்களுடன் கல்லூரியின் வாசலில் நின்று எப்போது சேர்க்கை துவ ங்கும் என்று விசாரித்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவ ட்டங்களிலும் உள்ள அரசுக் கலைக் கல்லூரிகளிலும் இதே நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியில் திருவாரூர் மாவட்டம் மன்னா ர்குடியில் உள்ள அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வாசலிலும் மாணவிகள் கூட்டம்தான் அதிகமாக உள்ளது. இது பற்றி மாதர் சங்கத்தின் மன்னார்குடி நகர தலை வர் தெ.சங்கரி மற்றும் செய லாளர் பி.கலைச்செல்வி விடு த்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது: மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரியில் மாண விகளில் 80 சதமான மாண விகள் கிராமப்புறங்களில் இருந்தும் 20 சதமானோர் மன்னார்குடி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம் போன்ற வட்ட தலைநகரங்களிருந்தும் வருகின்றனர்.
இவர்களில் பெரும்பகுதியினர் தாழ்த்த ப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடு ம்பங்களைச் சார்ந்தவர்கள் என்பதும் இவர்கள் அனை வருமே ஏழை-எளிய-நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் அனைவ ரும் அந்தந்த கிராமங்களில் அல்லது அருகே உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி களில் தமிழ் வழியில் படித்த வர்கள் என்பதும் குறிப்பி டத்தகுந்த உண்மையாகும். இவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள தனி யார் கல்லூரிகளில் படிக்க வசதியில்லாதவர்கள். ஒரு வகையில் அரசின் கல்வி உதவித் தொகையையே நம்பி உள்ளவர்கள். அரசு கலைக்கல்லூரிகளில் மாண வர்கள் சேர்க்கை நியாய ப்படுத்த முடியாத அளவில் தாமதிக்கப்படுவதால் இவ ர்கள் அனைவரும் மன உளை ச்சலிலும் கவலையிலும் உள்ளனர்.
இது பெரும் அநீதி யாகும். கல்லூரி கல்வி மற்றும் உயர்கல்வித்துறை இனியும் தாமதிக்காமல் ஏற்கனவே சான்றிதழ் பதி வேற்றங்களை தவறாக செய்தவர்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் பதிவேற்றம் செய்ய முடி யாதவர்களையும் சேர்த்து விண்ணப்பித்த அனைவரின் மதிப்பெண் தரவரிசை பட்டி யலை உடனே வெளியிட்டு மாணவர் சேர்க்கையை அறி விக்க வேண்டும். வறுமையிலும் இயலா மையில் வாழும் ஏழை-எளிய தாழத்தப்பட்ட பிற்ப டுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் உயர் கல்வி சமூகத்திற்கான கல்வி என்பதால் உயர்கல்வித்து றையும் மாநில அரசும் தாம தமின்றி மாணவர் சேர்க்கையை துவங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். (ந.நி)