திருவாரூர், ஜூன் 6- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் உள்ள பாரதி பேரவை மற்றும் தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் சார்பில் கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பேரிடர் கால நிவா ரண பணி 60 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்றது. திருத்து றைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் உள்ள 9 ஆயிரத்து 600 குடும்பங்களுக்கு 15 வகையான பசுமையான காய்கறித்தொகுப்பு மற்றும் 5 கிலோ அரிசி வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து வழங்கப்பட்டது. மேலும் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள நெடும்பலம், மங்கலநாயகிபுரம் கிராமங்கள், நாகப்பட்டினம் மாவட்டம் தலை ஞாயிறு ஒன்றியம் மகாராஜபுரம் கிராமம், வேதாரண்யம் ஒன்றியம் பிராந்தியங்கரை கிராம ஆற்றங்கரைத் தெரு ஆகிய பகுதிகளில் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வீடாக சென்று மேற்கண்ட அடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பாரதி பேரவை நிறுவனர் மற்றும் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் பா.பாரதிதாசன் ஒருங்கிணைப்பில் நாடைபெற்ற இப்பணியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பா.குகநாதன் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், பாரதி பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 12 லட்சத்து ஏழு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது. மார்ச் 22ஆம்தேதி தொடங்கிய இப்பணியின் இடையே மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 180 பேருக்கு 17 நாட்கள் மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு தஞ்சாவூர் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு கவனித்துக் கொள்ளப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கபசுர குடிநீர் தயாரித்து வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் வரிசையில் இன்று களப்பணியாற்றக்கூடிய திரு வாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார செய்தியாளர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.