திருவண்ணாமலை, மே 9- செங்கம் பகுதியில் காய்கறிகளை விற்பனை செய்ய மொத்த காய்கறி வியாபாரி களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என. செங்கம் பகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மொத்த காய்கறி கடைகள் இயங்கி வருகிறது. ஊரடங்கு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக கடைகளை திறக்கா மல் உள்ளனர். இந்நிலையில் செங்கம் மொத்த காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கே. ரசிஷித்கன், எம்.கே.எஸ். கார்த்திக், ஆர்.என்.முபாரக் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில், காய்கனி மருந்து பொருட் கள், மளிகை பொருட்கள், உணவகங்கள் எல்லாம் வழக்கமாக இயங்கி வருகின்றது, அதுபோல, செங்கம் காய்கறி மொத்த விற்ப னையாளர்கள் தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை சமூக இடைவெளியை பின்பற்றி, விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.