tamilnadu

img

உடையானந்தல் ஏரியை பாதுகாக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, பிப். 17- திருவண்ணாமலை அடுத்த, தென் மாத்தூர் உடையானந்தல் கிராமத்தில்உள்ள ஏரியை அப்பகுதியை சேர்ந்த சில தனி  நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்களுக்கு இயையூறு செய்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து, கிராம மக்கள்  திங்களன்று (பிப். 17) மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள  மனுவில் கூறியிருப்பதாவது, உடையானந்தல் ஏரியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.  ஏரியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க கிணறு அமைக்கப்பட்டுள்ளது.  அந்த கிணற்றையும், சில தனி நபர்கள் ஆக்கிரமித்து, பைப்லைன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.  மேலும், பூச்சிகொல்லி மருந்துகளை ஏரி நிலங்களில் பயன்படுத்துவதால், மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது,. கால்நடைகள் ஏரி தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.. சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.   எனவே  அந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்டு, நீராதாரத்தை பாதுகாக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.