india

img

கொரோனாவிலிருந்து கிராமங்களை பாதுகாக்க வேண்டும்..... ஆட்சியர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்.....

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமுள்ள  54 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி மே 20 வியாழனன்று ஆலோசனை நடத்தினார். 

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் தடுப்பூசிகளை போதுமான அளவிற்கு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கவும் மத்திய பாஜக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅரசியல் கட்சியினரும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி வெறும் ஆலோசனைக்கூட்டங்களை மட்டுமே நடத்துவதாக மக்கள் சாடுகின்றனர். 

இந்நிலையில் மே 20 அன்று10 மாநிலங்களில் உள்ள 54   மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துதல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் உடனிருந்தனர். அப்போது பிரதமர் பேசுகையில், கிராமங்களை கொரோனாவிடம் இருந்து பாதுகாக்கவேண் டும். பாதிப்பு குறைகிறது என்ப தால், தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டு விடக்கூடாது. 15 நாட்களுக் கான தடுப்பூசி திட்டங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. தடுப்பூசி தொடர்பான கால அட்டவணையை பராமிக்க, தடுப்பூசி விநியோகம் உங்களுக்கு உதவும். கொரோனாவானது, உங்களது பணியை மிகவும் கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் மாற்றியுள்ளது. உள்ளூர் அனுபவங்களை பயன்படுத்துவது முக்கியம். அதேநேரத்தில் ஒரே நாடு என்ற எண்ணத்துடன் நாம் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.