tamilnadu

img

ஏரியில் மூழ்கி மாணவர்கள் பலி

 திருவண்ணாமலை, செப்.12- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமம், பழைய காலனி பகுதியைக் சேர்ந்த பழனி மகன் கனகராஜ் (13), ராஜேஷ் மகன் கோகுல்(11) இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் முறையே 8, 5 ஆம் வகுப்பு படித்து வந்தனர். அருகிலுள்ள இரும்பேடு பெரிய ஏரியில் இறங்கி குளிக்கச் சென்றனர். நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தனர். தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, நீரில் மூழ்கி இறந்துபோன கனகராஜ், கோகுல், ஆகியோரது பிரேதத்தைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர். ஒரே கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்துபோன சம்பவம் கிராம மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.