tamilnadu

img

கரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

திருவண்ணாமலை, பிப்.13- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திவ்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.செல்வராஜன் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார், துணை தலைவர் எஸ்.பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் முருகன் வரவேற்றார்.  முகாமினை துவக்கி வைத்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீபா பிரியதர்ஷினி, வைரஸின் தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி என்று செய்முறையுடன் கூடிய விளக்க உரையாற்றினார்.  இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜன், மருத்துவ மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் அந்தோணிராஜ், பேராசிரியர்கள் அறிவரசு, அமுதா, கதிரவன், உடற்கல்வி ஆசிரியர் பஞ்சமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.