பொன்னேரி,செப்.16 செங்குன்றத்தில் இருந்து பழவேற்காடு செல்லும் அரசு பேருந்து திங்களன்று காலை பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். பொன்னேரி வந்த கல்லூரி மாணவ- மாணவிகள் 20 பேர் பஸ் பாசை காட்டினர். அதை பார்த்த டிக்கெட் பரிசோதகர்கள் இது விழுப்புரம் கோட்டத்தில் உள்ள பாஸ். இந்த பஸ்சில் வரும்போது டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து மாணவ- மாணவிகள் டிக்கெட் எடுத்தனர். மாணவ- மாணவிகளிடம் இருந்த பஸ்-பாஸ்களை வாங்கிய டிக்கெட் பரிசோதகர்கள் அதை திருப்பிக் கொடுக்கவில்லை. அலுவலகத்தில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றுவிட்டனர். பலமுறை கேட்டும் அந்த பஸ்பாசை திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து, பொன்னேரி பேருந்து நிலையம் சென்றதும், கல்லூரி மாணவ-மாணவிகள் கீழே இறங்கி பஸ்சை முற்றுகையிட்டனர். பஸ் பாசை திரும்ப கொடுக்கும்படி முழக்கமிட்டனர்.