tamilnadu

img

கை எலும்பு முறிந்த தொழிலாளிக்கு நிவாரணம் மத்திய அரசு நிறுவனத்திற்கு சிஐடியு கோரிக்கை

திருவள்ளூர், பிப்.23- சோழவரம் அருகே அலமாதி செமன் ஸ்டேஷ னில் பாதிக்கப்பட்ட தொழி லாளிக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள அலமாதியில் மத்திய அரசுக்கு சொந்தமான செமன்  ஸ்டேஷன் ( காளை  மாடுகளில் இருந்து வீரிய விந்து சேகரிக்கும் நிலையம்) உள்ளது. இந்த நிலையம் 5 ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் 1 டன்  எடை கொண்ட 300 வெளி நாட்டு காளை மாடுகள் உள்ளன. இந்த மாடுகள் மூலம் ஆண்டுக்கு 145 லட்சம் யூனிட் விந்துக்கள் சேகரித்து இந்தியா மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மாடுகளை பராமரிக்க இங்கு 200-பேர் ஒப்பந்த தொழி லாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி தீனதயாளன் என்பவர் பராமரிப்பு பணி யில் ஈடுபட்டபோது, மாடு முட்டியது. இதில் அவரது வலதுகை எலும்பு முறிவு ஏற்பட்டது. தீனதாயளனுக்கு நிர்வாகம் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய வில்லை எனக் கூறப்படு கிறது.  தீனதயாளன் தற் போது தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமையன்று செமண் ஸ்டேஷன் நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜ யன் தலைமை தாங்கினார். இதில் ஊத்துக்கோட்டை வட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜி.சம்பத், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண் டன் ஆகியோர் பேசினர்.  இதனைத் தொடர்ந்து சட்ட ரீதியான  உரிமைகள் வழங்கப்பட வேண்டும்,  நிர்வாகம் தொழிலாளர்களை அடிமைப்போல் நடத்து வதை கண்டித்து வெள்ளி யன்று (பிப்.28) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் சிஐடியு தலைவர்கள் அறி வித்துள்ளனர்.