திருவள்ளூர்,ஜூன் 10- கும்மிடிப்பூண்டி ஊராட்சி யில் பணியாற்றும் குடிநீர் விநியோகம் செய்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தூய்மை காவலர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் மேல்நீர் தேக்கத் தொட்டிகளை 250 பேர் இயக்குகிறார்கள். அதேபோல் துப்புரவு தொழி லாளர்கள் 300 பேர், தூய்மை காவலர்கள் 200 பேர் என பணியாற்றுகின்றனர். இவர்க ளுக்கு 2017 அக்டோபர் முதல் ஊதிய உயர்வு நிலு வைத் தொகை வழங்கப்பட வில்லை. இதனை உடனே வழங்க வேண்டும். டேங் ஆப்ரேட்டர்க ளுக்கு 27 மாதம் வரை ஊதியம் வழங்கப்பட வில்லை இதையும் உடனே வழங்க வேண்டும், எஸ். ஆர் புத்தகத்தில் முறையாக பதிவு செய்ய வேண்டும், அடையாள அட்டை, 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் கும்மிடிப்பூண்டி பி.டி.ஒ வளாகத்தில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிடிஒ ராம்குமார், சாமி நாதன் ஆகியோர் சிஐடியு தலைவர்களை அழைத்து பேசினார். இதில் இம்மாத இறுதிக்குள் நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப் பூர்வமாக உறுதிய ளித்தனர். இந்த போராட்டத்திற்கு நத்தம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சங்க த்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய நிர்வாகிகள் மாரி, முருகன், சாமிநாதன், முருகேசன், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.