திருவள்ளூர், அக்.31- பெரியபாளையத்தை அடுத்த நெய்வேலியில் உள்ள ஒன்றிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை யில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் வியாழ னன்று (அக். 31) ஈடுபட்ட னர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்கு ட்பட்ட நெய்வேலி மேட்டுத்தெரு, அம்பேத்கர் நகர், தலையாரி உள்ளிட்ட தெருக்களின் சாலைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சிய ளிக்கிறது. மேலும் தற்போது பெய்து வரும் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்களும் அதிகரித்து ள்ளது. மேலும் சாலை முழுவ தும் சேரும் சகதியுமாக உள்ளதால் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிறமப்படுகிறார்கள். பலருக்கு கிழேவிழுந்து காயங்களும் ஏற்படுகிறது. எனவே இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகி யோருக்கு பல முறை தொடர்ந்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்ற னர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி மக்கள் மேட்டுத் தெரு ஒன்றிய சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் வியாழ னன்று (அக்.31) ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் பி.முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ஜி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.ரவி, சி.பாலாஜி, என்.கங்காதரன், வட்டக்குழு உறுப்பினர்கள் த.கன்னியப்பன், பி.அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.