tamilnadu

img

6 வழிச் சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர், செப்.23-  6 வழிச் சாலைக்கு தடை விதிக்க வேண்டும், விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்களை அமைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்  திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை  திங்க ளன்று (செப்.23)  முற்றுகை யிட்டனர். பொன்னேரி அருகில் உள்ள தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சுமார் 128 கிலோ மீட்டர் தூரம்  6 வழிச் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தினால் 900 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் வனப்பகுதி உட்பட 80 ஏக்கர் நிலங்களும் பாதிக்க ப்பட உள்ளது.  6 வழிச் சாலை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற  கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயி கள் கடும் எதிர்ப்புகளை தெரி வித்தனர். இதனைத் தொட ர்ந்தும் காவல்துறையின் உதவியுடன்  ஊத்துக் கோட்டையில் விவசாய நிலங்களை எடுக்க முயற்சித்துள்ளனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் விளை நிலங்களையும், நீர் நிலை களையும் அழிக்கும் 6 வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும், ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை முதல் ரேணிகுண்டா வரை உள்ள நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும், விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட்டுவிட்டு சாலை ஓரங்களில் பூமிக்கடியில் கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  மீரா திரையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுக்க முயன்ற னர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்த னர். ஆனால் காவல்துறை யினரை மீறி உள்ளே சென்ற விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், பொருளாளர் சி.பெருமாள், மாவட்ட துணை நிர்வாகி கள் பி.ரவி, எம்.ரவிக்குமார், அப்சல் அகமது, விஸ்வ நாதன், குணசேகரன், பழனி, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.