ஈரோடு, ஜூலை 6- உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பது தொடர்பாக மின்துறை அமைச்சர் தவ றான தகவல்களை சட்டமன்றத்தில் பதிவு செய்வதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விளை நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து ஈரோடு, கோவை, திருப்பூர் உள் ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் போராட் டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப் பினர் எழுப்பிய கேள்விக்கு சனிக் கிழமையன்று சட்டமன்றத்தில் பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, 800 கிலோ வாட் மின் வழித்தடத்தை புதை வழி கேபிளாக கொண்டு செல்வது சாத்திய மில்லை என்றும், உயர்மின் கோபுரங்களால் எவ்வித தீங்கும் மக்களுக்கு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது தவறான தகவலாகும். ஏனெனில், குஜராத் மற்றும் கொச்சியில் இருந்து தென்ஆப்பிரிக்க நாட்டிற்கு 1100 கிலோவாட் மின் வழித்தடத்தை 3600 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிளாக அமைக்க முடியும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலை யில், தமிழக மின்துறை அமைச்சரின் பதில் இதற்கு நேர்மாறாக இருக்கிறது. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் கூறுவதில் எது சரியானது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும், பவர்கிரிட் நிறுவனம் 800 கிலோ வாட் மின் திட்டத்தில் 58 சதவிகித பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ள நிலை யில், சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டதாக உண் மைக்கு புறம்பான தகவல்களைப் பதிவு செய்துள்ளார். அதேபோல் மின் காந்த அலை கசிவால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதை விவசாயிகள் தொடர்ந்து சுட்டிகாட்டி வருகின்றனர். இச்சூழலில், உயர்மின் கோபுரத்தால் மக்களுக்கு பாதிப் பில்லை என அமைச்சர் கூறுவது சரியா னது அல்ல. மேலும், பாதிப்பில்லை என கூறும் அமைச்சரும், அதிகாரிகளும் மின் கம்பிகள் செல்லும் வழித்தடத்தில் வீடு கட்டி வசிக்கத் தயாரா இருக்கின்றனரா என தெளிவுபடுத்த வேண்டும். மேலும், மின்காந்த அலை வெளியாவது குறித்து ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆதாரத்தோடு நிரு பித்துள்ளார். ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகை யில், இணைப்புக் கொடுக்கப்படாத இடத் தில் எவ்வாறு மின் விளக்குகள் எரியும் என அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், மின் காந்த அலைகள் உள்ளது என ஆதாரத் தோடு நிருபிக்கப்பட்ட புகைப்படமானது தமிழ்நாடு மின் கழகத்தின் சார்பில் உயர் மின் கோபுரம் 400 கிலோவாட் மின் நடை முறைப்படுத்தப்பட்ட ராசிபாளையம் முதல் பாலவாடி பகுதிக்குட்பட்ட பெருந்துறை மூணாம்பள்ளி பகுதியில் எடுக்கப்பட் டது என்பதை அமைச்சருக்கு தெளிவு படுத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே, மின் துறை அமைச்சர் தங்கமணி பொய்யான தகவல்களை சட்டமன்றத்தில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.