tamilnadu

img

பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

கோவை, ஜூலை 21- பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் பவானியாற்று நீரை நம்பி செயல் பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள்  மற்றும் விளை நிலங்கள் பாதிக் கப்படும் என தமிழக விவசாயிகள் சங்கம்  குற்றஞ்சாட்டியுள்ளது. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்திற் கேற்ப கோவை மாநகராட்சிக்கென பிரத்தேயகமாக ரூ.978 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது பில்லூர் குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்ட மிடப்பட்டு அதற்கான முதற்கட்ட  ஆய்வு பணிகள் துவங்கியுள்ளன. இத்திட்டத்தின்படி மேற்குத்தொ டர்ச்சி மலைக்காட்டில் இருந்து சமதளபகுதியான மேட்டுப்பாளை யத்தினுள் பவானியாறு நுழையும் பகுதியான சமயபுரம் என்னுமிடத் தில் இருந்து தினசரி 38 கோடி  லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகை யில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக குடிநீர் குழாய் பதிக்கவும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வும் 163.36 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட உள்ளது.  ஏற்கனவே பவானியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் இருந்து பில்லூர் முத லாம் மற்றும் இரண்டாம் கூட்டு  குடிநீர் திட்டம் மூலம் கோவை மாந கராட்சி மற்றும் புறநகர் பகுதிக ளுக்கு தினசரி பத்து கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலை யில்இக்குடிநீர் திட்டத்தை செயல் படுத்த மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஞாயி றன்று புங்கம்பாளையம் கிராமத் தில் அதன் செயலாளர் வேணு கோபால் தலைமையில் விவசாயி கள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் மூன்றாம் குடிநீர் திட்டத்திற்காக சமயபுரம் பகு தியில் இருந்து நீர் எடுத்தால் பவானி யாற்றை நம்பியுள்ள பிற குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும். புதிய  திட்டத்திற்காக தண்ணீர் எடுக்கப் படும் பகுதிக்குக் கீழ் பகுதியில் இருந்து ஏற்கனவே பதினைந்திற் கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில் மேல் பகுதியில் இருந்து தண்ணீர் எடுப்பதால் பயன்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள் முடங்கிப் போகும் அபாயம் உள்ளதாக தெரி வித்த விவசாயிகள், இந்த திட்டத் திற்காக தங்களது விளை நிலங் களைக் கையகப்படுத்த முயற்சி கள் நடப்பதாகவும் புகார் தெரிவித் தனர். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள் பாதிக் காத வகையில் ஆற்றின் கீழ் பகுதி யான சிறுமுகையில் இருந்து பில் லூர் மூன்றாம் திட்டத்திற்கு தண் ணீர் எடுக்க வேண்டும், இதற்கான குழாய்களை விவசாய நிலங்களை தவிர்த்து சாலை ஓரங்களில் பதிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பில்லூர் மூன் றாம் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பிற குடிநீர் திட்டங்கள் மற்றும் விவசாய விளை நிலங்கள் பாதிக்காத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் விவசா யிகளை ஒன்று திரட்டி போராட் டத்தில் ஈடுபடுவது என இக்கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.