tamilnadu

img

பள்ளி நிலத்தை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூலை 29 - திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியானது 50 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தலை வர் காமராஜரால் திறக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குச் சொந்தமான சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள 44 செண்ட் அரசு  நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருகிறார். இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர், பொன்னேரி வட்டாச்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இந்நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் பள்ளிக்குச் சொந்த மான இடத்தை மீட்கக் கோரி திங்க ளன்று (ஜூலை 29) பாடியநல்லூர் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் வில்சன், 3 நாட்களில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முனி யாண்டி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.நடே சன், கிராம பிரமுகர்கள் சேகர், ராஜ், குலசேகரன், கே.நடராஜன், இருதயராஜ், பலராமன், துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.