திருவள்ளூர், மார்ச் 19- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ள, ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சிகளில் கிருமி நாசினி மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கண்கா ணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஊரகப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பொது இடங்கள், சந்தைகள், பேருந்து நிலை யங்கள், பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலை யங்கள், கோயில்கள், மத வழிபாட்டுத் தலங்கள், கல்லூரி மற்றும் பள்ளி வளா கங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முழுமையாக சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் கிருமி நாசினியை கொண்டு சுத்தமாக வைத்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது அனைத்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் முழுமையாக தூய்மை செய்யும் பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளிப்பு பணிகளை கண்காணிக்க, கண்கா ணிப்பு அலுவலர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளனர்.
வில்லிவாக்கம்: இ.கே.ரகு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) 8778700978, புழல் எஸ்.ரமாமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)7402606114,
சோழவரம்: எஸ்.ஆர்.கீதா, உதவி நிர்வாகப் பொறியாளர்,(ஊரக வளர்ச்சி), சைதை உட்கோட்டம், 7402606117,
பூவிருந்தவல்லி: பூவை.சீதாலட்சுமி, உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு-2), மா.ஊ.வ.மு, திருவள்ளுர்7402606107,
கும்மிடிப்பூண்டி: ஜெ.ஜெரால்டு, உதவி நிர்வாகப் பொறியாளர்,(ஊரக வளர்ச்சி), பொன்னேரி உட்கோட்டம் 7402606120,
மீஞ்சூர்: சி .பரந்தாமன்:உதவி நிர்வாகப் பொறியாளர், மா.ஊ.வ.மு, திருவள்ளூர் 7402606115, எல்லாபுரம்வி.கென்னடி பூபாலராயன், மாவட்ட ஊராட்சி செயலர், திருவள்ளுர்: 7402606113, பள்ளிப்பட்டு: ஜி.சங்கரன், உதவி நிர்வாகப் பொறியாளர், மா.ஊ.வ.மு, திருவள்ளூர்,7402606116,
ஆர்.கே.பேட்டை: எ.மொகைதின் பாத்திமா, உதவி நிர்வாகப் பொறியாளர், (ஊரக வளர்ச்சி) திருத்தணி உட் கோட்டம்,7402606119,
திருவாலங்காடு: எல்.சத்தியசங்கரி, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்), மா.ஊ.வ.மு, திருவள்ளூர், 7402606108
திருத்தணி: வி.அம்பிகாபதி, உதவி திட்ட அலுவலர் (ஊ (ம) வே), மா.ஊ.வ.மு, திருவள்ளூர் 7402606109,
கடம்பத்தூர்: ஆர்.ஸ்ரீதர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), திருவள்ளூர், 7402606 111, பூண்டி டி.ஆனந்தி, உதவி நிர்வாகப் பொறியாளர், (ஊரக வளர்ச்சி) திருவள்ளூர் உட்கோட்டம்7402606118,
திருவள்ளுர்: பி.முத்துக்குமார், உதவி இயக்குநர் (தணிக்கை),திருவள்ளூர் 7402606112.
முழுமையான தூய்மைப் பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளிப்பு பணிகளை துரிதப்படுத்தி வைரஸ் பரவாமல் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படு வதை தினமும் ஊராட்சி ஒன்றியங்களுக்குச் சென்று மேற்பார்வையிட்டு, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சிப் பணியா ளர்களை ஒருங்கிணைத்து தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.