திருவள்ளூர், நவ.27- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தி ற்கு உட்பட்ட மேல்முதல ம்பேடு, கோட்டைகரை, நத்தம், கண்லூர், சிறு புழல்பேட்டை, வழுதல ம்பேடு, செதில்பாக்கம், மாம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு நிலங்க ளில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை குடிமனைப் பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் அலுவல கத்தில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பின்னர் மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆண்டவன், சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.நடே சன், எஸ். எம்.அனீப், என்.ரமேஷ்குமார், இ.தவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர், ஆட்டந்தாங்கள், முல்லை வாயல், பஞ்செட்டி, மொரட்டூர் உள்ளிட்ட பகுதியிலிந்து பொதுமக்கள் பங்கேற்றனர்.