திருவள்ளூர், செப்.11- திருவள்ளூர் அருகில் உள்ள மோவூர் ஊராட்சியில் 50 குடும்பத்தினர் அரசு புறம்போக்கு நிலத்தில் மல்லி, முல்லை, கீரை, காய்கறிகள் போன்ற பயிர்களை ஒரு தலைமுறை யாக சாகுபடி செய்து வந்தனர். இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருந்த னர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வருவாய்துறை அதிகாரி கள் எவ்வித முன்னறிவிப்பு இன்றி 50 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்திருந்த பயிர்களை ஜேசிபி கொண்டு சேதப்படு த்தினர். இதனால் பயிர் சாகுபடி செய்திருந்த விவசா யிகள் வேதனையடைந்தனர். இதனை தொடர்ந்து, விவசாய நிலங்களில் சாகுபடி செய்த பயிர்களை சேதம் செய்த கிராம நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதனன்று (செப்.11) பூண்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகை யிடப்படும் என அறிவிக்க ப்பட்டது. இந்நிலையில், விவசாயி கள் சங்க தலைவர்களுடன் அதிகாரிகள் திங்களன்று (செப்.9) பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் சாகுபடி செய்த பயிர்களை சேதப்படுத்தியது தவறு என்றும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக அதிகாரி கள் கூறினர். இதனை யடுத்து போராட்டம் கைவிட ப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை யில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.