திருவள்ளூர்,ஜூன் 20- சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலுமாக வறண்டு விட்டதால் கடும்குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவ சாய ஆழ்துளை கிணறுக ளில் இருந்து நிலத்தடி நீரை எடுத்து சென்னைக்கு வழங்கி வருகிறது. இதற்கு ரூ. 47 கோடி நிதி அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், திரு வள்ளூர் மாவட்டம் மாகறல், கீழனூர், அத்தி காவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் உள்ள 316 ஆழ்துளை கிணறுகளிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீர் எடுப்பதற்கு விவசாயி களிடம் குடிநீர் வடிகால் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனடிப்படையில், நிலத்தடி நீர் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் விவசாய மோட்டார்களுக்கான மின் கட்டணத்தை அரசே மின் வாரியத்திற்கு செலுத்து கிறது. மேலும் ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீருக்கு கட்டணமாக விவசாயி களுக்கு ரூ.2.50 காசு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 6 கோடி லிட்டர் நிலத்தடி நீர் எடுத்து, மாகறல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்ற நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு ராட்சத தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. பின்னர் புழலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணம் போதுமானதாக இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர். அரசு விற்பனை செய்யும் அம்மா குடிநீர் ஒரு லிட்டர் ரூ.10 விற்பனை செய்யப்படு கிறது. ஆனால் தண்ணீர் தரும் எங்களுக்கு குறைந்த காசே கொடுக்கிறார்கள் என்றும் விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும், மோட்டார்கள் பழுதடைந்தால், அதன் பராமரிப்பு செலவையும் நாங்கள் தான் ஏற்க வேண்டி உள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு தண்ணீர் எடுப்பதற்கான கட்டணத்தை ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும். இல்லை என்றால், சென்னைக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.