சென்னை:
தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு கொடுப்பதாக அதிமுக ஒப்பந்தம் செய்யவில்லை என்றுஅதிமுகவின் மூத்த நிர்வாகியும் மீள்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்த பதிலால் தேமுதிகவினர் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெறுகிறது.இதற்கிடையில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட்வேண்டும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சென்னை தரமணியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலங்களவை எம்.பி. பதவியை தேமுதிகவுக்கு கொடுப்பதாக அதிமுக ஒப்பந்தம் செய்யவில்லை. பாமகவுக்கு மட்டுமே எம்.பி.பதவி கொடுப்பதாக அப்போது அதிமுக ஒப்பந்தம் செய்தது.தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும்.இது கட்சியின் கொள்கை முடிவு, தனி நபர் முடிவு அல்ல.ரஜினி - கமல் கூட்டணி குறித்து அதிமுகவுக்கு கவலை இல்லை.ரசாயனம் கலந்த மீன்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.