tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீர்குலைக்கப்பட்ட திருப்பூர் மக்களை அல்லல்படுத்திவிட்டு அதிமுக பெருமிதப் பேச்சு...

1ம் பக்கத் தொடர்ச்சி.... 

எங்கு அடிப்படையான தேவை இருக்கிறதோ அங்கே எந்த வேலையும் நடைபெறுவதில்லை. ஏற்கெனவே ஓரளவாவது வேலைகள் நடைபெற்ற பகுதிகளிலேயே மீண்டும் மீண்டும் அடுத்தக்கட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும். இப்படியாக திருப்பூர் மாநகரம் முழுமையும் உருக்குலைந்த நிலையில் இருக்கிறது என்று சொல்வது மிகையல்ல. இந்த இடர்பாடுகளுக்கு நடுவில்தான் இங்குவாழும் லட்சக்கணக்கான மக்கள் அன்றாடம் வேலைக்குச் செல்வதும், வாழ்வாதாரம் தேடுவதுமாக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த அல்லல்பாடுகள் மக்களுக்குப் பழகிப் போய்விட்டது. இதுதான் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் தற்போதைய நிலை.

ஆனால் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மேலிருந்து திணிக்கும் இந்த திட்டங்களால் இந்த நகரின் உண்மையான தேவைகள், அடிப்படை பிரச்சனைகள் தீரப் போவ தில்லை. குறிப்பாக, திருப்பூர் மாநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட சேரிப்பகுதிகள் உள்ளன. தொழிலாளர் களுக்கு குடியிருப்பு என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. போக்குவரத்துக்கு நல்ல தரமான சாலைகள் இல்லை. பொழுதுபோக்குவதற்கு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் இல்லை. நகரில் பெருமளவுமக்கள் கூடுவதற்கு பொருத்தமாக இருந்த டவுன்ஹால் மைதானத்தை யும், அங்கிருந்த கூட்ட அரங்கை யும்தான் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆக்கிரமித்து பல அடுக்கு வாகன நிறுத்தம், கூட்ட அரங்கம் கட்டுகிறார்கள். அது வணிக நோக்கிலான திட்டங்கள் என்பதால் சமூக நோக்கில் பயன்படுத்த முடியுமா என்பதுகேள்விக்குறியே!

இஎஸ்ஐ மருத்துவமனை
இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதாக 2005ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்தொழிலாளர் நலத்துறை அமைச்ச ராக இருந்த, இப்போதைய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்தார். 16 ஆண்டுகள் கடந்துவிட்டது! இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டு இதே பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி இங்கு வந்தபிரதமர் மோடி ஏற்கெனவே அடிக்கல்நாட்டப்பட்ட இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு மீண்டும் அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு ஒரு ஜல்லிக் கல் கூட அங்கு வைக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது. புதன்கிழமை திருப்பூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமியும், வழக்கு காரணமாக இஎஸ்ஐ மருத்துவமனை கட்டப்படவில்லை என்று சொன்னார், ஆனால் அப்பிரச்சனையை களைந்து உடனடியாக மருத்துவமனை யைக் கட்ட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொல்லவில்லை.

பின்னலாடை தொழில் துறையினரும் உள்கட்டமைப்பு வசதி தேவை என்று தொடர்ந்து வற்புறுத்து கின்றனர். உழைக்கும் மக்களுக்கும் வீடு, குடிநீர், மருத்துவம், கல்வி, பொழுது போக்கு உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுகிறது. ஆனால் இதில்எதையும் ஆட்சியாளர்கள் செய்ய வில்லை. இப்போது செய்யப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் அனைத்துமே வணிக நோக்கில், கட்டணம் செலுத்தி சேவையைப் பெறுவது என்பதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இது இங்குள்ள மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மாறாகசுமையைக் கூட்டுவதாகவே அமையும். 

இந்த நிலையில் அதிமுக ஆட்சியாளர்கள் மக்களை கடுமையாக அல்லல்படுத்திவிட்டு, அவர்கள் தேவையையும் காது கொடுத்துக் கேட்டு நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யாமல் பெருமிதமாகப் பேசுவது இங்குள்ள மக்களை எரிச்சல்கொள்ளச் செய்துள்ளது. ஆட்சியா ளர்களின் சாதனைப் பட்டியலை மக்கள் நிராகரிப்பார்கள் என்பது உறுதி.

- வே. தூயவன்