tamilnadu

திருப்பூரில் காரில் கஞ்சா கடத்தல்: நால்வர் கைது- 15 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூர், ஜூன் 5 - திருப்பூரில் காரில் கஞ்சா கடத்திச் சென்றதை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறை யினர் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட காரை பறிமுதல் செய்ததுடன், அதில் பயணித்த இருவர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் வேலம்பாளையம் சாலையில் வாகனத் சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது சரவணன் மற்றும் செல்லதுரை ஆகிய இருவர் வந்த வாகனத்தை சோதனையிட்டனர்.

அதில் 15 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக இருவ ரிடமும் விசாரனை மேற்கொண்ட காவல்துறை யினர்  ஆந்திராவில் இருந்து 15 கிலோ கஞ்சாவை கொரியர் சர்வீஸ் மூலம் அவிநாசி கொண்டு வந்து பின்பு அதை திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் விற் பனை செய்வதற்கு கொண்டு வந்தது கண்டறியப் பட்டது .உடனடியாக சரவணன் மற்றும் செல்லதுரை கைது செய்த காவல்துறையினர் அவருக்கு உத வியதாக காந்திநகர் ராஜகோபால் என்பவருடைய மகன் ரகு மற்றும் ஹரிஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து கஞ்சா கடத்தி வந்த காரையும் பறி முதல் செய்துள்ளனர்.