அவிநாசி, மார்ச் 14- தில்லியில் நடைபெற்ற வன்முறையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், அவிநாசி அருகே கருவலூர் பகுதி யில் சனியன்று நிதி வசூல் இயக்கம் நடைபெற்றது. தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும் பப் பெற வலியுறுத்தி அமைதி வழியில் போராடி வந்த மக்கள் மீது சங்பரி வார் குண்டர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வீடு மற்றும் உடமைகளை இழந்து ஏராளமானோர் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், இம்மக்களுக்கு உத விடும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் நிதி திரட்டி வருகி றது. அதன் ஒரு பகுதியாக அவிநாசி ஒன்றி யத்திற்குட்பட்ட கருவலூர் பகுதியில் பொது மக்கள், வணிகர்கள் ஆகியோரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செய லாளர் எஸ்.வெங்கடாசலம் தலைமையில் நிதி வசூல் செய்யப்பட்டது. இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.