உடுமலை, ஜூன் 7- திருப்பூர் மாவட்டம், உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சனியன்று நடைபெற்றது. இதில், நேர்மை யான முறையில் பணி செய்து வந்த வாளவாடி கிராம உதவியாளர் தி.திலீப் மீது பிஜேபி கட்சியை சேர்ந்த சிலரால் கொடுக்கப்பட்ட உண்மைக்கு மாறான புகாரின் அடிப்படையில், காவல்துறையால் வழக் குப்பதிவு செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய் யப்பட்டார். இந்நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், மேற்கண்ட நடவடிக்கை மீது மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சுமூக தீர்வு காணக் கோரி சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறை யிட்டு இயக்கம் நடத்துவது என்றும், உடுமலைப் பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு வியாழனன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டத்தை நடத்திடுவதெனவும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.