tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது

அவிநாசி, ஜூன் 6- திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேவூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சேவூர் தேவேந்திரன் நகர் பகுதியை சேர்ந்த நடராஜ் (45) என்பவர் சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.