திருப்பூர், மார்ச் 25 – தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நியாய விலைக் கடைகள் செயல்படும் என அரசு அறிவித்துள் ளது. எனவே மக்கள் அதிகமாக கூடு வதற்கு வாய்ப்பிருக்கும் நிலையில், நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்கிட வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கூட்டுறவுப் பணியா ளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள் ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட் டக் கூட்டுறவுப் பணியாளர் சங்கத் தின் செயலாளர் கௌதமன் செவ்வா யன்று விடுத்துள்ள செய்தி அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவ லைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சம யம் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த அலுவல்கள் நடைபெறும் என்றும், அதன் ஒரு பகுதியாக நியாயவிலைக் கடைகள் செயல்படும் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது. ஆலைகள் மூடப்பட்டு, வேலை வாய்ப்பு, வருமான இழப்பைச் சந்திக் கும் நிலையில் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கும், அரசு அறி வித்துள்ள ரூ.1000 நிவாரணத் தொகை பெறவும் அதிக அளவில் நியாய விலைக் கடைகளில் திரள்வதற்கு வாய்ப்பு உள்ளது. சமூக விலக்கம் அவசியம் என்ற நிலையில் நியாயவிலைக் கடைகளில் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவற்கு உரிய நடவ டிக்கைகளை நியாயவிலைக் கடை பணியாளர்கள் மட்டும் மேற்கொள்ள இயலாது. எனவே நிலைமையைக் கவ னத்தில் கொண்டு தேவையான கட்டுப் பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெச்சரிக்கையாக மேற் கொள்ள வேண்டும். அத்துடன் நியாய விலைக் கடைகளில் வேலை செய்யக் கூடிய பணியாளர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம் வழங்குவது, மருத் துவப் பரிசோதனை செய்வது ஆகிய பணிகளை சுகாதாரத் துறை மூலமாக அரசு உடனடியாக மேற்கொண்டு கூட் டுறவுப் பணியாளர்கள் அனைவ ருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சிஐடியு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.