tamilnadu

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பம் வரவேற்பு

திருப்பூர், ஜூலை 22- திருப்பூரில் உள்ள தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையினர் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி நடப்பாண்டிற்கான  விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆண்டு வருவாய் 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மேலும், வருமான சான்றிதழ், தமிழ்ப் பணியாற்றியதற்கான தகுதிச் சான்றிதழ், தமிழறிஞர்கள் இரண்டு பேருடன் பெறப்பட்ட விண்ணப்பம் இணைக் கப்பட வேண்டும்.  இதற்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறை வளைய தளத்திலோ இலவசமாக பதிவேற்றிக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண் ணப்பங்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் அலுவலகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.