tamilnadu

விகடன் தொழிலாளர்கள் வேலை நீக்கம் விருதை திருப்பி அனுப்பிய நூலாசிரியர் செ.நடேசன்

திருப்பூர், மே 26- விகடன் நம்பிக்கை விருது 2017 -ஐ வருத்தத்து டன் திருப்பி அனுப்புவதாக சிறந்த மொழிபெயர்ப்பு நூ லாசிரியர் செ.நடேசன் கூறி யிருக்கிறார். தமிழ்நாடு அரசு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரான செ.நடேசன், இதுகுறித்து ஆனந்தவிகடன் நிர்வாகத்துக்கு அனுப்பிய  மின்னஞ்சலில் குறிப்பிட்டி ருப்பதாவது, இன்றைய கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் தொழிலா ளர்களைப் பாதுகாக்க வேண்டிய தருணத்தில் விக டன் நிர்வாகம் 176 தொழிலா ளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது கவலை அளிக் கிறது. தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட உரிமைக்குரல் எழுப்ப  வேண்டியது பத்திரிகைக ளின் கடமை ஆகும். ஆனால் விகடன் நிர்வாகத்தின் செயல் இதற்கு மாறாக உள்ளது என்பதை என்னால்  ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. எனவே, 2017 ஆம்  ஆண்டின் சிறந்த மொழிபெ யர்ப்புக் கட்டுரை நூலாக நான் தமிழாக்கம் செய்த ‘கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்’ -ஐ தேர்வு செய்து, சென்னை யில் நடத்திய விழாவில் எனக்கு வழங்கிய விகடன்  நம்பிக்கை விருதைத் திருப்பி அனுப்புகிறேன் என்பதை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.