tamilnadu

img

பொய் புகாரில் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜூன் 11- இயற்கை வள கொள்ளைக்கு துணை போகும் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்தும், பொய் புகாரில் கைது செய்யப் பட்டு பணியிடை நீக்கப்பட்ட திலீப் பிற்கு நியாயம் கேட்டும் வியாழ னன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாக முன்பு அரசு ஊழி யர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா பெரியவாளவாடி கிராமத் தில் கிராம நிர்வாக உதவியாளராக திலீப் என்பவர் பணிபுரிந்து வருகி றார். இவர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு எதிரான கருத் துகளை சமுக வலை தளத்தில் பரப்பி வருகிறார் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலரால் தளி காவல் நிலையத்தில் புகார் அளிக் கப்பட்டது. இந்த புகாரின் அடிப்ப டையில் கடந்த வாரம் உடுமலை வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்கு மார், எந்தவித விசாரணையும் நடத் தாமல் திலீப் மீது ஒழுக்கு நடவடிக் கையாக பணி இடை நீக்கம் செய் தார்.  

முன்னதாக, பெரியவாளாடி கிராம் என்பது நீர் நிலைகள் அதிகம் உள்ள பகுதி. இப்பகுதியில் சட்ட விதிகளுக்கு புறம்பாக மண் எடுத்து வருபவர்கள் குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறை அதி காரிகளுக்கு திலீப் தகவல் அளித்து வந்துள்ளார். இந்த கனிம வளங் களை கொள்ளையடித்து வருபவர்க ளுக்கு காவல்துறை அதிகாரி ஒருவ ரும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக தற்போது பொய் புகாரின் பேரில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி வியாழனன்று உடுமலை வட் டாட்சியர் அலுவலக வளாக முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக்கிளை தலைவர் வைரமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் பாலசுப்பிரமணியம், பொது செயலாளர் அம்சராஜ், மாவட்ட தலைவர் பாஸ்கரன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எஸ். ஜெகதீசன், இந்திய ஜனநாய வாலி பர் சங்கத்தின் மாவட்ட பொருளா ளர் ஓம்பிரகாஷ், அரசு ஊழியர் சங்க வட்டகிளை செயலாளர்கள் வெங்கி டுசாமி, முருகசாமி, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் எல்லம்மாள் உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.